வாகன ஓட்டிகள் கவனத்திற்கு..! இனி இப்படி செய்தால் உங்கள் FASTag Blacklist செய்யப்படும்..!
இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு சுங்க கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. முன்னர் வெறும் பணமாக மட்டும் பெறப்பட்டு வந்த சுங்க கட்டணம் தற்போது ஃபாஸ்ட் டேக் காடு முறையில் பெறப்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் ஃபாஸ்ட் கார்டுகளை பொருத்திக்கொண்டு ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்தால் அதிலிருந்து நேரடியாக பணம் கழிக்கப்பட்டு சுங்க கட்டணம் வசூல் நடக்கிறது.
இந்நிலையில் இந்த கார்டை முன்பக்கம் உள்ள கண்ணாடியில் ஸ்டிக்கராக ஒட்டாமல் வைத்திருக்கிறார்கள். இதனால் சுங்கச்சாவடிகளில் இந்த ஸ்டிக்கரை ஸ்கேன் செய்ய முடியாமல் சிஸ்டம் தவிக்கிறது.சிலர் இந்த ஸ்டிக்கரை கண்ணாடியில் ஒட்டாமல் கையில் எடுத்துச் சென்று சுங்கச்சாவடியில் காட்டி கட்டணம் செலுத்துகின்றனர். இதனால் சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் வாகனங்களின் கண்ணாடியில் ஒட்டாமல் கைகளில் எடுத்துச்சென்று சுங்கச்சாவடியில் காண்பிக்கப்படும் FASTagகள் Blacklist செய்யப்படும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது.