பக்தர்கள் கவனத்திற்கு..! இனி திருப்பதி போக FASTAG கட்டாயம்!
திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் திருமலைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். அவர்கள் வாகனங்களில் வரும் போது சுங்கச்சாவடிகளில் மற்றும் பார்க்கிங் பகுதிகளில் ஏற்படும் நெரிசல் காரணமாக சாமி தரிசனம் செய்ய தாமதம் ஏற்படுகிறது
இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி, திருமலைக்கு வாகனங்களில் வரும் பக்தர்களுக்கு விரைவாக செல்லவும், நெரிசல் இல்லா பயணம் வழங்க TTD முடிவு செய்துள்ளது. இதற்காக, திருமலைக்கு வரும் வாகனங்களுக்கு FASTag-ஐ கட்டாயமாக்க முடிவு செய்துள்ளது. இந்த நடைமுறை வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் நடைமுறைக்கும் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 15 முதல் ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்கள் திருமலைக்குள் அனுமதிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அலிபிரி சோதனைச் சாவடியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைத்து பக்தர்களின் பயண நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் ஃபாஸ்டேக் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. ஃபாஸ்டேக் இல்லாத பக்தர்களின் வசதிக்காக, அலிபிரி சோதனைச் சாவடியிலேயே அதைப் பெற்றுக்கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.
அலிபிரி சோதனைச் சாவடியில் ஃபாஸ்டேக் பெறுவது எப்படி?
அதாவது அலிபிரி சோதனைச் சாவடியிலேயே ICICI வங்கியுடன் இணைந்து ஒரு ஃபாஸ்டேக் வழங்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மையத்தில் கிடைக்கும் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை இணைத்துச் சமர்ப்பிக்க வேண்டும். ஃபாஸ்டேக் அட்டைக்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
.png)