1. Home
  2. தமிழ்நாடு

சுவிக்கி, அமேசான் உள்ளிட்ட நிறுவன டெலிவரி தொழிலாளர்கள் கவனத்திற்கு!

1

கோவையில் சுவிக்கி, சொமேட்டோ, அமேசான், பிலிப்கார்ட் உள்ளிட்ட இணையம் சார்ந்த தொழில் நிறுவனங்களில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள்  (GIG WORKERS) அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்து பயன்பெற ஒரு நல்ல வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர் சமூக பாதுகாப்பு நலவாரியம் உருவாக்கப்பட்டு அதில் 18 வகையான தொழிலாளர் நலவாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் பல்வேறு வகையான கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள 18 வயதிற்கு மேற்பட்ட 60 வயதிற்குட்பட்ட தொழிலாளர்கள் பதிவு செய்து, அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இதில் இணையம் சார்ந்த வேலை செய்யும் தொழிலாளர்கள் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்யும் பொருட்டு, கோவை மாவட்ட கலெக்டர் தலைமையில் வரும் 23-05-2025 (வெள்ளிக்கிழமை) அன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் அரங்கில் (GDP HALL) பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை கூட்டம் நடைபெற உள்ளது.

மேலும் தொழிலாளர்கள் தாமே பதிவு செய்வதற்கு ஆதார் எண்ணுடன் இணைக்ககப்பட்ட செல்போன் எண், அசல் ஆதார் அட்டை, அசல் குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம், வயதிற்கான ஆவணத்துடன், https://www.tnuwwb.tn.gov.in/ என்ற இணையதளம் மூலமும் பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு சமூக பாதுகாப்பு திட்டம் தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like