ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்துக்கு..! உங்களுக்கு இன்னும் 2 வாரம் தான் டைம் இருக்கு..!
குழந்தையை பள்ளியில் சேர்ப்பது முதல், இறந்த நபர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வாங்குவது வரை அனைத்துக்கும் ஆதார் கார்டு அவசியம்.ஆதார் கார்டு வெறும் அடையாள அட்டை மட்டுமில்லாமல் அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கும் அவசியமாக உள்ளது.
10 வருடங்களுக்கு முன் ஆதார் கார்டு புதிதாக வாங்கியிருப்பார்கள். அப்படி ஆதார் கார்டு வாங்கி 10 ஆண்டுகள் ஆகியிருந்தால் அதை அப்டேட் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆதார் கார்டில் உள்ள தகவல்கள் தற்போதைய தகவல்களாகவும் அப்டேட்டுடன் இருக்க வேண்டும்.
ஆதாரில் உள்ள முகவரி தவறாக இருந்தால் நீங்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆதாரில் உள்ள விவரங்கள் சரியாக இல்லாவிட்டால் அரசின் உதவிகளைப் பெறமுடியாது.
ஆதார் கார்டு விஷயத்தில் பொதுமக்களுக்கு மத்திய அரசு பெரிய நிவாரணம் வழங்கியுள்ளது. 10 ஆண்டுகள் பழமையான ஆதார் கார்டைப் புதுப்பிக்க இப்போது எந்தக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. இதற்கான காலக்கெடு செப்டம்பர் 14ஆம் தேதியே முடிவடைந்துவிட்டது. ஆனால் அது தற்போது டிசம்பர் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆதார் கார்டை அப்டேட் செய்ய இரண்டு விருப்பங்கள் உள்ளன. My Aadhaar போர்டல் மூலம் அப்டேட் செய்யலாம். அல்லது, ஆதார் சேவை மையத்துக்குச் சென்று அப்டேட் செய்யலாம். ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் பொதுச் சேவை மையத்துக்குச் சென்று பெயர், புகைப்படம், மொபைல், முகவரி போன்ற விவரங்களை புதுப்பிக்கலாம். ஆனால் அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் ஆன்லைனில் அப்டேட் செய்வது தற்போது இலவசம்.
https://myaadhaar.uidai.gov.in/portal eன்ற வெப்சைட்டில் ஆதார் OTP சரிபார்ப்பு மூலம் உள்நுழைய வேண்டும். அடுத்து ’Update Demographic Data’ ஆப்சனை கிளிக் செய்து நிலையை சரிபார்க்க வேண்டும். ஆதார் எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட வேண்டும். பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP நம்பரை உள்ளிட வேண்டும். இப்போது Update Demographic Data விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அடுத்த பக்கத்தில் தொடர்புடைய தகவலைப் புதுப்பித்து, Proceed என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். அப்டேட் தொடர்பான ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
ஆதார் கார்டில் இலவசமாக அப்டேட் செய்வதற்கான காலக்கெடு முடிந்ததும் இதற்கு நீங்கள் ஆதார் சேவை மையத்திற்குச் செல்ல வேண்டும். அங்கே ஆதாரை புதுப்பிப்பதற்கு கட்டணம் விதிக்கப்படும். ஆதாரில் பயோமெட்ரிக் அப்டேட் செய்ய 100 ரூபாயும், மக்கள்தொகை தரவுகளுக்கு 50 ரூபாயும், ஆன்லைனில் ஆதார் பதிவிறக்கத்திற்கு 30 ரூபாயும், முகவரியைப் புதுப்பிக்க 25 ரூபாயும் வசூலிக்கப்படும். எனவே இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு டிசம்பர் 14ஆம் தேதிக்குள் இலவசமாக அப்டேட் செய்துகொள்ளவும்.