1. Home
  2. தமிழ்நாடு

காதல் கணவர் 2ஆவது திருமணம் செய்ய முயற்சி.. திருநங்கை கண்ணீர் மல்க புகார் !

காதல் கணவர் 2ஆவது திருமணம் செய்ய முயற்சி.. திருநங்கை கண்ணீர் மல்க புகார் !


சென்னை ஷெனாய் நகரை சேர்ந்தவர் திருநங்கை சோபனா (27). எம்பிஏ பட்டதாரியான இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் எச்.ஆர். மேலாளராக பணியாற்றி வருகிறார்.

சோபனாவை கணேஷ்குமார் என்ற இளைஞர் காதலித்து வந்தார். அதாவது தனியார் கூரியர் நிறுவனத்தில் வேலை செய்யும் கணேஷ்குமார் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவரை காதலித்து வந்தார்.

காதல் கணவர் 2ஆவது திருமணம் செய்ய முயற்சி.. திருநங்கை கண்ணீர் மல்க புகார் !

பின்னர் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி கணேஷ் குமார், சோபனா திருமணம் செய்து கொண்டார். இருவரும் ஷெனாய் நகரில் உள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து அங்கு குடியேறினர். சிறிதுகாலம் ஒன்றாக இருவரும் வசித்து வந்த நிலையில், குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணேஷ்குமார் மனைவியை பிரிந்தார்.

இந்நிலையில் அவருக்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துவைக்க பெற்றோர் நிச்சயம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த சோபனா, வடபழனி காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

அதில் தனது கணவர் தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய ஏற்பாடு நடப்பதாக தெரிவித்துள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க அதில் கோரியுள்ளார். இந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in


Trending News

Latest News

You May Like