பானிபூரி ருசியாக இல்லாததால் கொலை முயற்சி!

பானிபூரி ருசியாக இல்லாததால் கொலை முயற்சி!

பானிபூரி ருசியாக இல்லாததால் கொலை முயற்சி!
X

பானிபூரி ருசியாக இல்லை என்று கூறி வாங்கி சாப்பிட்ட வாடிக்கையாளர் ஒருவர் விற்றவரை கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை புதூர் 120 அடி சாலையில் கார்த்திக் என்பவர் பானிபூரி விற்பனை செய்து வருகிறார். அவர் கடைக்கு வந்த 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பானிபூர் ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். பானிபூரியை சாப்பிட்ட அந்த நபர் ருசியாக இல்லை என்றுக்கூறி கடைக்காரர் காரத்தியிடம் சண்டை போட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து இருவருக்கும் இடையேயான சண்டை முற்றியது. கடுமையாக ஆத்திரம் அடைந்த அந்த நபர் கடைக்காரர் கார்த்தியை கொலை செய்ய முயற்சி செய்து, கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். பின்னர் அந்த நபர் அங்கிருந்து சென்றார்.

இதனையடுத்து அடையாளம் தெரியாத அந்த நபர் மீது கார்த்திக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் கொலை மிரட்டல் விடுத்த நபர் யார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it