புதுச்சேரியை தமிழகத்துடன் இணைக்க முயற்சி! நாராயணசாமி பகீர் தகவல் !
புதுச்சேரியை தமிழகத்துடன் இணைக்க முயற்சி நடைபெற்று வருவதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
புதுச்சேரியில் உள்ள கிருமாம்பாக்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் கடந்த 2008-ம் ஆண்டு ரூ.1.80 கோடி செலவில் கட்டப்பட்ட மாணவிகள் விடுதியை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி திறந்து வைத்தார்.
விழாவில் பேசிய அவர், இந்தியாவில் தமிழகம், ஆந்திரா மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இலவச அரிசி வழங்கப்படுகிறது. ஆனால், புதுச்சேரியில் மட்டும் அரிசி தர வேண்டாம் என ஆளுநர் தடுக்கிறார்.
மத்திய அரசுடன் சேர்ந்து கவர்னர் புதுச்சேரியின் எல்லா உரிமைகளையும் பறித்து வருகிறார். மேலும், புதுச்சேரியை தமிழகத்துடன் இணைக்க ஆளுநர் முயற்சி செய்து வருகிறார். இப்படி ஒரு சூழ்நிலையில் புதுச்சேரியில் எதிர்க்கட்சி செயல்படாமல் எதிரி கட்சியாக உள்ளது.
நாங்கள் புதுச்சேரி நலன் கருதி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் என்றார்.