ஷேர் ஆட்டோவில் இளம்பெண்ணை கடத்த முயற்சி - பட்டப்பகலில் நடந்த கொடூரம் !

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் ஆட்டோவில் சென்ற இளம் பெண் ஒருவர் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுதுள்ளது.
குன்னூர் ஒட்டுபட்டரை பகுதியைச் சேர்ந்த சார்லஸ், அம்பிகாபுரம் பகுதியைச் சேர்ந்த அனிஷா ஆகியோர், ஆட்டோவில் சென்று முட்டை, டீ தூள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில், அனிஷா கோத்தகிரிக்கு செல்ல அந்த வழியே வந்த ஒரு ஆட்டோ தடுத்து நிறுத்தி பயணம் செய்துள்ளார். சிறிது தூரம் ஆட்டோ சென்ற நிலையில், ஆட்டோவில் உள்ளவர்கள் அனிஷாவை துப்பாக்கியை காட்டி மிரட்டி அடித்து உதைத்துள்ளனர். மேலும், அவர் அணிந்திருந்த தங்க நகைகளையும் பறிக்க முயன்றுள்ளனர்.
அப்போது, அனிஷா சத்தம் போடவே, அங்கிருந்தவர்கள் ஆட்டோவை தடுத்து நிறுத்தி, ஆட்டோ ஓட்டுநர் மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த பெண் ஆகியோரை பிடித்து கோத்தகிரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்கள் இருவரையும் கைது செய்த காவல்துறையினர் கோத்தகிரி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
படுகாயமடைந்த அனிஷா சிகிச்சைகாக உதகை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் குறித்து கோத்தகிரி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கி முனையில் இளம் பெண் கடத்தபட்ட சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in