வளிமண்டல மேலடுக்கு சுழற்சி.. தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிககை !

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தருமபுரி, தென்காசி, விருதுநகர், கிருஷ்ணகிரி, கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மதுரை, திருவாரூர், சிவகங்கை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
எஞ்சிய கடலோர மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்தில் சேலம், கிருஷ்னகிரி, தருமபுரி, மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அதேபோல் அதிபட்சமாக திருத்துரைப்பூண்டி, கோவில்பட்டி, மதுக்கூரில் தலா 3 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: மன்னார் வளைகுடா, வங்கக்கடலின் மத்திய கிழக்கு, தெ.மே.பகுதி, அந்தமான் கடல் பகுதியில் சூறைக்காற்று வீசக்கூடும். மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்களுக்கு 2 நாட்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
newstm.in
,