1. Home
  2. தமிழ்நாடு

மார்ச் 21-ஆம் தேதியை ‘மண் காப்போம் தினமாக’ அறிவித்தது அட்லாண்டா!

Q

கொள்கை சீர்திருத்தத்திற்கான முதல்படியாக இருக்கட்டும் என சத்குரு வாழ்த்து
அமெரிக்காவின் அட்லாண்டா மாநகர சபை, சத்குரு அவர்களின் மண் காப்போம் இயக்கம் துவங்கப்பட்ட மார்ச் 21-ஆம் தேதியை ‘மண் காப்போம் தினமாக’ அறிவித்துள்ளது. 
மண் காப்போம் இயக்கத்தினை சத்குரு அவர்கள் கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் 21-ஆம் தேதி துவங்கினார். விவசாய நிலங்களில் உள்ள மண்ணில் குறைந்தது 3 முதல் 6 சதவிகிதம் வரை அங்கக கரிமத்தை பராமரிக்க வேண்டும் மற்றும் உலகளவில் அரசாங்கங்கள் இதற்கான கொள்கைகளை வகுக்க வேண்டும் என வலியுறுத்தி இவ்வியக்கம் கடந்த 3 ஆண்டுகளாக சர்வதேச அளவில் செயல்பட்டு வருகிறது. 
இவ்வியக்கம் உலகளவில் குன்றி வரும் மண்வளம் குறித்து ஏற்படுத்தி இருக்கும் விழிப்புணர்வு, ஐநாவின் சுற்றுச்சூழல் அமைப்புகளோடு இணைந்து மேற்கொள்ளும் பணிகள் மற்றும் சர்வதேச அளவில் இவ்வியக்கத்திற்கு கிடைத்திருக்கும் அங்கீகாரங்கள் ஆகியவற்றை குறிப்பிட்டு அட்லாண்டா மாநகர சபை இவ்வியக்கம் துவங்கப்பட்ட மார்ச் 21-ஆம் தேதியை "மண் காப்போம் தினமாக" அறிவித்துள்ளது. 
இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சத்குரு “அட்லாண்டா நகரின் அறிவிப்பிற்கு வாழ்த்துக்கள். இது மண்வளத்தினை காக்கும் கொள்கை சீர்திருத்தத்திற்கான முதல் படியாக இருக்கட்டும். அட்லாண்டா, நீங்கள் ட்ரெண்ட் செட்டராக மாறி அமெரிக்காவின் மண்வள மேம்பாட்டிற்கான மூல வரைபடத்தை வழங்க வேண்டும்.” எனக் கூறியுள்ளார்.


 

Trending News

Latest News

You May Like