நாளை டெல்லி மாநில முதல்வராக அதிஷி பதவியேற்பு..!
கலால் கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமீன் பெற்ற டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, புதிய முதல்வராக அமைச்சர் அதிஷி தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, புதிய அமைச்சரவை பதவியேற்க அதிஷி துணைநிலை ஆளுநரை நேரில் சந்தித்து உரிமை கோரினார்.
டெல்லியின் முதல்வராக அதிஷி வருகின்ற சனிக்கிழமை பதவியேற்பார் என்றும், அவருடன் அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்திருந்தது. இந்த நிலையில், அமைச்சரவைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. சுல்தான்பூர் எம்.எல்.ஏ. மஜ்ரா முகேஷ் அஹ்லாவத்துக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், செளரப் பரத்வாஜ், கைலாஷ் கெலாட், கோபால் ராய் மற்றும் இம்ரான் ஹுசைன் ஆகியோர் மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.