அதிஷி ஒரு டம்மி சி.எம்.! எகிறிய ஆம் ஆத்மி எம்.பி…!
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மாட்டிய கெஜ்ரிவால் ஒரு வழியாக ஜாமினில் வெளி வந்துள்ளார். அவருக்குக் கடும் நிபந்தனைகளைக் கோர்ட் விதித்துள்ள நிலையில் தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
அவருக்குப் பின் டில்லி முதல்வராக யார் பொறுப்பேற்பார் என்ற கேள்வி எழுந்தது. கட்சி எம்.எல்.ஏக்களுடன் நடந்த ஆலோசனைக்குப் பின்னர் முறைப்படி அதிஷி மர்லேனா புதிய முதல்வராக அறிவிக்கப்பட்டார். இவர் கெஜ்ரிவால் அமைச்சரவையில் ஒரே பெண் அமைச்சராக இருந்தவர்.
கட்சியின் ஒருமனது முடிவு என்று அறிவிக்கப்பட்டாலும் ஆம் ஆத்மிக்கு உள்ளே இருந்து எதிர்ப்புக்குரலும் எழுந்துள்ளது. இந்தக் குரலை எழுப்பி இருப்பவர் ராஜ்ய சபா எம்.பி., சுவாதி மாலிவால். இது குறித்து தமது எக்ஸ் வலை தளத்தில் அவர் கூறி இருப்பதாவது;
டில்லிக்கு இன்று சோகமான நாள். தீவிரவாதி அப்சல் குருவைத் தூக்கிலிடாமல் காப்பாற்றுவதற்காக அதிஷி குடும்பத்தினர் போராடினர். அதிலிருந்து வந்தவர் அதிஷி. அவர் தான் இப்போது முதல்வராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
அப்சல் குரு நிரபராதி, சதி செய்து அவர் சிக்க வைக்கப்பட்டார் என்று அவரைக் காப்பாற்ற அதிஷி பெற்றோர் ஜனாதிபதிக்கு கருணை மனுக்களை அனுப்பியவர்கள். அதிஷி ஒரு டம்மி முதல்வர். இருந்தாலும், இந்த விஷயம் ஒரு நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. கடவுள் டில்லியை காக்கட்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டு உள்ளார்.