“அதிரசம்-முறுக்கு காம்போ” விற்பனை தொடக்கம்..!

தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனையில் “அதிரசம்-முறுக்கு காம்போ” என்ற விற்பனை தொகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ‘அதிரசம்-முறுக்கு காம்போ’ தொகுப்பில் பச்சரிசி மாவு-500கிராம், பாகு வெல்லம்-500கிராம், ஏலக்காய்-5கிராம், மைதா மாவு-500கிராம், Sunland/Goldwinner Sunflower Oil -1/2லிட்டர் என 5 வகையான பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்புத் தொகுப்பு ரூ.190/- என்ற விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.
இந்த தொகுப்புகள் அனைத்து வெளி சந்தையில் கிடைப்பதை விட குறைவான விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது. எனவே, கூட்டுறவுத் துறையின் மூலம் ”கூட்டுறவு கொண்டாட்டம்” என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கூட்டுறவு விற்பனை பண்டகசாலைகள் மூலம் தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனையினை வாங்கி அனைத்து தரப்பு மக்களும் சிறப்பாக தீபாவளி பண்டியைகை கொண்டாடி மகிழ கேட்டுக்கொள்கிறேன்” என கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்கள்.