பெட்ரோல் டேங்கர் வெடித்து விபத்து: 90 பேர் பலி..!

நைஜீரியாவின் ஜிகாவா மாநிலத்தில் எக்ஸ்பிரஸ் சாலையில் எரிபொருள் ஏற்றி கொண்டு லாரி ஒன்று சென்றது. அந்த டேங்கர் லாரி திடீரென சாலையில் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து அந்த லாரி சாலையில் கவிழ்ந்தது. அப்போது லாரியில் இருந்த எரிபொருள் சாலையில் ஆறு போல் ஓடியது. அதனை அங்கிருந்தவா்கள், அந்த வழியாக சென்றவா்கள் என பலரும் அவற்றை எடுத்து செல்வதற்கு குவிந்தனா்.
இந்த நிலையில், பெட்ரோல் சேகரிக்கும் முயற்சியின் போது டேங்கர் திடீரென வெடித்து சிதறியதில் 90க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகியது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு, கடுமையான அபாயங்கள் இருந்தபோதிலும், விபத்து நடந்த இடங்களிலிருந்து ஆபத்தான முறையில் எரிபொருளைச் சேகரிக்க மக்கள் குவிந்ததால் இத்தகைய சோக நிகழ்வு ஏற்பட்டுள்ளது. மேலும் விபத்து மற்றும் அதைத் தொடர்ந்து வெடித்த சூழ்நிலைகள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Fuel tanker explosion kills at least 90 in northwestern Nigeria pic.twitter.com/oL5iHRNEze
— Türkiye Today (@turkiyetodaycom) October 16, 2024
Fuel tanker explosion kills at least 90 in northwestern Nigeria pic.twitter.com/oL5iHRNEze
— Türkiye Today (@turkiyetodaycom) October 16, 2024