குறைந்தது 80 ரூபாய்... ஏறியது 136 ரூபாய்.. மக்கள் புலம்பல்..!
தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களுடனேயே இருந்து வருகிறது. ஒரு நாள் உயர்வதும், மறுநாள் குறைவதுமாக போக்கு காட்டி வரும் தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வந்தது. அந்தவகையில் கடந்த சனிக்கிழமை சவரனுக்கு 120 ரூபாயும், திங்கள் கிழமை சவரனுக்கு ரூ. 80ம் குறைந்தது. தொடர்ந்து நேற்றைய தினம் மீண்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 80 குறைந்து ஒரு சவரன் ரூ.44,280க்கும், ஒரு கிராம் ரூ.5,535க்கும் விற்பனையானது. வெள்ளி விலையை பொறுத்தவரை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.80க்கு விற்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ. 136 அதிகரித்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரன் ரூ44,416க்கும், கிராமுக்கு ரூ.17 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,552க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தைப்போன்ரு இன்றைய தினம் வெள்ளி விலையும் அதிகரித்திருக்கிறது. அதன்படி சில்லறை விற்பனையில் வெள்ளி விலை 40 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ. 80.40 காசுகளுக்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.80,400க்கு விற்கப்படுகிறது.