1. Home
  2. தமிழ்நாடு

நெடுஞ்சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம் - 19 பேர் பலி..!

1

தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் நெடுஞ்சாலையின் ஒரு பகுதி இன்றைய உள்ளூர் நேரப்படி அதிகாலையில் இடிந்து விழுந்தது. இதனால் அவ்வழியே கடந்த கார்கள் உருண்டோடி விழுந்ததில் குறைந்தது 19 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குவாங்டாங் மாகாணத்தில் உள்ள Meizhou நகரத்திற்கும் Dabu கவுண்டிக்கும் இடையேயான சாலையின் ஒரு பகுதி, அதிகாலை 2:10 மணியளவில் கனமழையால் அரிக்கப்பட்டதில் இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 18 வாகனங்களும், அதில் பயணித்த 49 பேரும் ஆபத்தில் சிக்கினார்கள்.

காலை 11:45 மணி நிலவரப்படி இந்த விபத்தில் 19 பேர் இறந்துவிட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். மேலும் 30 பேர் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சீன ஒளிபரப்பு நிறுவனமான சிசிடிவி தெரிவித்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் அபாயக்கட்டத்தை தாண்டியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காட்சிகள், நெடுஞ்சாலை பகுதியளவு உருக்குலைந்து இருப்பதையும், அதன் சரிவின் அடிவாரத்தில் உருண்டோடி சிதைந்த வாகனங்ளை காட்டுகின்றன.

மீட்பு நடவடிக்கைக்கு உதவ சுமார் 500 பேர் அடங்கிய குழு அங்கே முகாமிட்டுள்ளது. வழக்கமான பாதுகாப்பு, அவசரகால தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் ஆகியோருடன் சுரங்க மீட்பு குழுவினரும் அதில் அடங்கியுள்ளனர். சேதமடைந்த இந்த எஸ்12 நெடுஞ்சாலையின் இரு திசைகளிலும் மூடப்பட்டு, மாற்றுப்பாதையில் போக்குவரத்து திருப்பிவிடப்பட்டுள்ளது.


 

Trending News

Latest News

You May Like