1. Home
  2. தமிழ்நாடு

மின்சாரம் பாய்ந்து 14 சிறுவர்கள் படுகாயம்..! மின்சாரம் பாய்ந்து 14 சிறுவர்கள் படுகாயம்..!மகா சிவராத்திரி ஊர்வலத்தில் சோகம்

Q

மகாசிவராத்திரியை முன்னிட்டு ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில்  இன்று சிவ பாரத் ஊர்வலம் நடைபெற்றது. இதில் குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் சிவ பக்தர்கள் சிவ முழக்கம் எழுப்பியபடி வந்தனர். ஊர்வலம் இன்று மதியம் 12 மணியளவில் குன்ஹரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாகதோரா பகுதியில் சென்றபோது திடீரென அவர்களை மின்சாரம் தாக்கியது. 

 

இதில் 14 சிறுவர்கள் உடல் கருகிய நிலையில் துடித்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு கோட்டாவில் உள்ள எம்.பி.எஸ். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ள சிறுவர்களில் 2 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது.

Trending News

Latest News

You May Like