1. Home
  2. தமிழ்நாடு

ஜோதிடம் அறிவோம் : நவரத்தின மோதிரத்தை யார் யார் அணியலாம்? அதன் பலன்கள் என்ன தெரியுமா ?

1

ஒவ்வொரு ராசிக்கென குறிப்பிட்ட நவரத்தினங்கள் குறிப்பிடப்படுகின்றன. அப்படி நவரத்தின மோதிரம் ஒருவருக்கு சரியாக பொருந்திவிட்டால் அவருக்கு சிறப்பான அதிர்ஷ்டத்தை பெறுவார்கள் என கூறப்படுகிறது.குடும்பத்தில் அமைதியும், நிம்மதியும் இருப்பதோடு மகிழ்ச்சியும் எப்போதும் இருக்கும். அவருக்கு மரியாதையும், புகழும் தேடி வரும்.இப்படி பல சிறப்பான பலன்களைத் தரக்கூடிய நவகிரக மோதிரம் அனைவருக்கும் ஏற்புடையதாக இருக்காது என்பது தான் உண்மை.

யாரெல்லாம் நவரத்தின மோதிரம் அணியலாம்?
நவகிரகங்களில் செவ்வாய் பகவானை அதிபதியாக கொண்ட மேஷ ராசி, மேஷ லக்னம், விருச்சிக ராசி, விருச்சிக லக்னம் மற்றும் சித்திரை, அவிட்டம், மிருகசீரிடம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நவரத்தின மோதிரத்தை அணியலாம்.இப்படி செவ்வாய் பகவான் ஜாதகத்தில் ஆட்சி பெற்றோ அல்லது உச்சம் பெற்றோ இருப்பவர்கள் நவரத்தினத்தை அணியலாம். திருமணமான ஆண்கள் இந்த நவகிரக மோதிரத்தில் இரவில் அணிதல் கூடாது. அதுமட்டுமல்லாமல் பெண்கள் இந்த மோதிரத்தை கண்டிப்பாக அணியக்கூடாது, அணிந்தால் கிரக தோஷங்கள் ஏற்படும்.

நவகிரக மோதிரத்தை அணிவதற்கு முன் அவரின் ஜாதகத்தை முதலில் ஜோதிடர்களிடம் ஆராய்ந்து, ஜாதகத்திற்கு ஏற்றவாறு நவகிரக மோதிரத்திற்கான உலோகம், கற்களை தேர்வு செய்து அணிந்து கொள்வதால் நாம் நினைத்த காரியங்களை நிறைவேற்றும் பலன்கள் பெறலாம்.

எண் கணிதமும், நவகிரக மோதிரமும்
ஒருவரின் பிறந்த தேதியின் கூட்டு எண் 9 வருபவர்கள், அதாவது 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் இதனை அணியலாம் என எண் கணித முறைப்படி கூறப்படுகிறது.

என்கணிதத்தில் பிறவி எண் 2, 7 கொண்டவர்கள் இந்த நவரத்தின மோதிரத்தை அணிதல் கூடாது. நவரத்தின மோதிரம் அல்லது நவரத்தினம் கொண்ட அணிகலன் அணிய நினைப்பவர்கள் முதலில் நவரத்தினங்களை தன்னுடன் சில வாரம் வைத்து சோதித்துப் பார்த்து, சாதக நிலை ஏற்பட்டால் அதை அணியலாம்.

Trending News

Latest News

You May Like