1. Home
  2. தமிழ்நாடு

ஜோதிடம் ஸ்பெஷல் : எப்போதும் மன அழுத்தம், குழப்பத்திலேயே இருக்கக்கூடிய ராசிகள்..!

1

ஒவ்வொரு ராசியும் ஒரு குறிப்பிட்ட குண நலன்களை கொண்டிருக்கின்றன. அவர்களின் செயல்பாடும் அவர்களின் குணத்தைப் பொருத்த அமைகிறது. என்ற பகுதியில் சில ராசியை சேர்ந்தவர்கள் ஏதேனும் ஒரு விஷயத்தை நினைத்து மனக்கவலையில் இருப்பார்கள். மன அழுத்தமான சூழ்நிலையில் அவர்களால் யோசிக்கவோ அல்லது எதிலும் கவனம் செலுத்த இயலாத நிலையில் இருப்பார்கள்.அப்படிப்பட்ட ராசிகள் யாரேனும் தெரிந்து கொள்வோம்.
 

கடக ராசி

கடக ராசி சேர்ந்தவர்கள் பொதுவாக உணர்ச்சிவசப்படக் கூடிய நபர்களாக இருப்பார்கள். இவர்கள் சிறிய விஷயத்தை கூட நுட்பமாகச் செய்ய நினைப்பார்கள். இருப்பினும் இவர்களின் உணர்ச்சிவசத்தால் அல்லது ஏதேனும் ஒரு விஷயங்களை யோசித்து மன அழுத்தத்தில் இருப்பார்கள். அதனால் தங்கள் வேலையை சரியாக முடிக்க முடியாததோடு குற்ற உணர்ச்சிக்கும் ஆளவார்கள். இதன் காரணமாக கடக ராசியினர் யோக, தியானத்தைச் சிறுவயதில் இருந்தே பயில்வது நல்லது.


கன்னி ராசி

கன்னி ராசி பிறந்தவர்கள் தங்கள் வாழ்க்கையில் உள்ள ஒவ்வொரு பிரச்சனைகளையும் கூர்ந்து கவனிக்க கூடியவர்கள். இது அவர்களின் வாழ்க்கையில் நேர்மறையான விளைவுகளைக் கொடுக்கலாம். ஆனால் அதுவே அவர்களுக்கு கவலையாகவும் அமையக்கூடும். எல்லா வேலைகளையும் பிழையின்றி, எந்த தவறும் இன்று செய்து முடிக்க நினைப்பார்கள். ஆனால் வாழ்க்கையில் எல்லா வேலைகளையும் எந்த தவறும் நடக்காமல் யாராலும் செய்து முடிக்க முடியாது என்ற யதார்த்தத்தை உணர்ந்து செயல்பட வேண்டியது அவசியம். இவர்களின் பிரச்சனைகள் குறித்த அதீத கவனித்தால் மன அழுத்தமும், நம்பிக்கையின்மையும் இவர்களுக்கு அதிகரிக்கும்.

விருச்சிக ராசி

விருச்சிக ராசி சேர்ந்தவர்களுக்கு தங்கள் செயலில் தீவிரமாகவும் உணர்ச்சி மனப்பான்மை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். எல்லா விஷயத்தையும் உணர்வு ரீதியாக அணுகக் கூடியவர்கள். சில சமயங்களில் சோகமான சூழ்நிலையானது அவர்கள் எதிர்பார்த்ததை விட வருத்தத்தை அதிகரிக்கும். இவர்கள் பல நேரங்களில் பொறாமை குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

இவர்களின் உணர்வு மற்றும் இவர்கள் நினைத்ததை நடக்காத நேரத்தில் மனக்கவலை அதிகரிக்கும். இவர்கள் நினைத்ததை முடிக்க நிறைய போராட வேண்டியது இருக்கும். உணர்ச்சிகளைக் கட்டுப்பாட்டிற்குள் வைக்க விட்டால் மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும்.

மகர ராசி

மகர ராசி சேர்ந்தவர்கள் கடின உழைப்பிற்குப் பெயர் பெற்றவர்கள். இவர்கள் சில சமயங்களை அதிக பொறுப்பை ஏற்றுக் கொள்வார்கள். தன்னுடைய வேலையை சரியாக முடிக்கக்கூடிய நபர்கள் என்பதால் இவர்களிடம் அதிக பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். பணியிடத்தில் இவர்கள் முடியாது, இயலாது என்ற பேச்சு இவர்களிடம் இருக்காது என்பதால் அதிக வேலையை இவர்கள் மீது திணிப்பார்கள். இதனால் உருவாக்கக்கூடிய மன அழுத்தத்தை பணியிடத்தில் வெளிப்படுத்த இயலாததால் மன நிம்மதி இன்றி சோர்ந்து இருப்பார்கள்.
மகர ராசி சேர்ந்தவர்கள் தங்களின் மன அமைதியை காத்துக் கொள்ள முயற்சி செய்யவும். சூழலை சரியாக கையாளக் கற்றுக் கொள்வது நல்லது.

Trending News

Latest News

You May Like