1. Home
  2. தமிழ்நாடு

ஜோதிடம் அறிவோம் : மீன ராசிக்கு அந்த 2 ராசியுடன் காதல் செட் ஆகாதாம்..!

1

மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிக்காரர்களுக்கும், அவர்களின் குணங்களுடன் ஒத்துப் போகாத ராசிகள் என்ன? 

மேஷம் - மகரம்

செவ்வாய் கிரகத்தை அதிபதியாக கொண்ட மேஷ ராசிக்காரர்கள் ஆற்றல் மிக்கவர்கள். புதிய விஷயங்களில் ஆர்வம் அதிகம் செலுத்தக் கூடியவர்கள். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் இந்த மேஷ ராசிக்காரர்களின் வேகத்திற்கு ஈடு கொடுப்பது சற்று கடினமான விஷயம் ஆகும். மேலும், தன்னம்பிக்கை அதிகம் கொண்ட இந்த மேஷ ராசிக்காரர்கள் முடியாது என எளிதில் ஒப்புக்கொள்வது இல்லை.

எந்த ஒரு விஷயத்தையும் இறுதி நொடி வரை முயற்சித்துப் பார்ப்பவர்கள். அதேநேரம் மகர ராசிக்காரர்கள், நீண்டகால திட்டமிடலுக்கு பெயர் பெற்றவர்கள். ஆம், எந்த ஒரு விஷயத்தையும் நன்கு ஆராய்ந்து, நிதானமாக திட்டம் தீட்டி, பொறுமையாக செய்து முடிப்பவர்கள்.

தங்களின் வெற்றிக்கு இந்த நிதானம் தான் காரணம் எனும் கருத்தில் உறுதியாக இருக்கும் இந்த மகர ராசிக்காரர்கள், மேஷ ராசிக்காரர்களின் வேகத்திற்கு ஈடு கொடுப்பது இல்லை. அந்த வகையில் இந்த இரண்டு ராசிக்காரர்களுக்கும் காதல் பொருத்தம் சிக்கல்கள் நிறைந்த ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

ரிஷபம் - கும்பம்

சுக்கிரனை ஆளும் கிரகமாக கொண்ட ரிஷப ராசிக்காரர்கள், கலைத்துறையில் ஆர்வம் கொண்டவர்கள். நல்ல உணவு மற்றும் ஓய்வுக்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள். சுருக்கமாக கூறினால் சௌகரியமான வாழ்க்கை வாழ விரும்புபவர்கள். ரிஷப ராசிக்காரர்களுக்கு காதல் உறவு என்பது, நீண்ட கால உறவுக்கான ஒரு தேடல். அதாவது, காதல் உறவு என்பது இவர்களுக்கு ஒரு ஆத்மார்த்த உறவு.

தன்னுடன் காதல் உறவில் இருக்கும் நபர்கள் நேர்மையாகவும், எளிமை விரும்பியாகவும் இருக்க வேண்டும் என விரும்பக் கூடியவர்கள். மறுபுறம் கும்ப ராசிக்காரர்கள், வசதியான மற்றும் ஆடம்பரமான வாழ்க்கை வாழ விரும்புபவர்கள். தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் தன்னிச்சை முடிவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த கும்ப ராசிக்காரர்கள், ரிஷப ராசிக்காரர்களின் குணத்துடன் ஒத்துப்போவது கிடையாது.

ரிஷப ராசியினர் விரும்பும் இயல்பான வாழ்கை, கும்ப ராசியினருக்கு பிடிப்பது இல்லை. அந்த வகையில் இந்த இரண்டு ராசிக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் உண்டாகி, உறவில் விரிசல் உண்டாக கூடும்.

மிதுனம் - மீனம்

அறிவு, ஆற்றல், புகழுக்கு உரிய கிரகமான புதன் கிரகத்தை அதிபதியாக கொண்டவர்கள் இந்த மிதுன ராசிக்காரர்கள். மிதுன ராசிக்காரர்கள் சுறுசுறுப்பாக இருக்க கூடியவர்கள், சமூகத்தில் தனக்கென ஒரு தனி அடையாளத்துடன் வாழக்கூடியவர்கள். மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயங்களை செய்ய விரும்பும் இந்த மிதுன ராசிக்காரர்கள், தங்களை சுற்றியுள்ளவர்களும் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள்.

ஆக்கப்பூர்வமான விஷயங்களை ஆர்வமாக விவாதிக்கும் பண்பு கொண்ட இந்த மிதுன ராசிக்காரர்கள், வேடிக்கையான விஷயங்களை செய்யவும் தயங்குவது இல்லை. மறுபுறம் மீன ராசிக்காரர்கள், நிலைத்தன்மையை விரும்ப கூடியவர்கள். மீன ராசிக்காரர்களும் வேடிக்கையானவர்கள் தான், ஆனால் குறிப்பிட்ட எல்லை வரை மட்டுமே இவர்களின் வேடிக்கை நீடிக்கும்.

மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து, அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய போராடும் இந்த மீன ராசிக்காரர்கள், மிதுன ராசிக்காரர்களின் எதிர்பார்ப்புக்கு மிஞ்சியவர்கள். இது, இவ்விரு ராசிக்காரருக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளியை உண்டாக்குகிறது. ஒருவருக்கொருவர் தாங்கள் புறக்கணிக்கப் படுவதாக கருதி, உறவில் இருந்து விலகிச் செல்லலாம்!

மகரம் - துலாம்

மகர ராசிக்காரர்கள் கடின உழைப்பாளிகள், லட்சியவாதிகள். குடும்ப உறவுகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை, தங்களின் பணி மற்றும் தொழிலுக்கும் அளிக்க வேண்டும் என விரும்புபவர்கள். சனி கிரகத்தை அதிபதியாக கொண்ட இந்த மகர ராசிக்காரர்கள், சுய ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள்.

எவரையும் மிக எளிதில் நம்பாத இவர்கள், தங்கள் வாழ்க்கை துணையை தேர்வு செய்வதில் அதிகம் சிந்திக்கின்றனர். மறுபுறம் துலாம் ராசிக்காரர்கள் வசீகரிக்கும் திறன் கொண்டவர்கள். மற்றவர்களுடன் எளிதில் நட்பு பாராட்டும் தன்மை கொண்ட இவர்களுக்கு, மகர ராசிக்காரர்களின் பண்புகள் சற்று வேடிக்கையாக தென்படுகிறது.

மகர ராசிக்காரர்கள் நடைமுறை வாழ்க்கைக்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள், துலாம் ராசி கொண்டவர்களோ நடைமுறை வாழ்க்கைக்கு மிஞ்சி விஷயங்கள் குறித்து சிந்திப்பவர்கள். இரண்டு ராசிக்காரர்களுக்கு இடையே காணப்படும் இந்த மாறுபட்ட விருப்பங்கள், இவ்விரு ராசியினரையும் காதலுக்கு பொருந்தாத ராசியாக அடையாளப்படுத்துகிறது.

விருச்சிகம் - சிம்மம்

விருச்சிக ராசிக்கார்கள் அதிகம் உணர்ச்சிவசப்பட கூடியவர்கள். விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரையில் காதல் என்பது, ஒரு ஆத்மார்த்த உறவுக்கான தேடல். தங்கள் வாழ்க்கை துணையுடன் இவர்கள் ஆழமான ஒரு உறவை பராமரிக்க விரும்புகின்றனர்.

நேர்மைக்கு முன்னுரிமை அளிப்பவர்கள், பொய் கூறுவது என்பது இவர்களுக்கு பிடிக்காத ஒரு விஷயம். இவர்களிடம் இருந்து பிரிக்க முடியாத ஒரு விஷயமாக பிடிவாதம் பார்க்கப்படுகிறது. மறுபுறம் சிம்ம ராசிக்காரர்களும் பிடிவாத குணத்திற்கு பெயர் பெற்றவர்கள்.

மேலும், இரண்டு ராசிக்காரர்களும் ஆதிக்கம் செலுத்த விரும்புகிறார்கள், மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறார்கள். இதன் விளைவாக இந்த இரண்டு ராசிக்காரருக்கும் இடையே நிகழும் அதிகாரப் போராட்டம், இவர்கள் இருவரையும் எதிரிகளாக மாற்றிவிடுகிறது. அந்த வகையில் இந்த இரண்டு ராசிகளும் காதலுக்கு பொருந்தாத ராசிகளாக குறிக்கப்படுகிறது.

தனுசு - கன்னி

வியாழன் கிரகத்தை அதிபதியாக கொண்ட ராசி தனுசு. நம்பிக்கை, ஞானம், உறுதியை குறிக்கும் ஒரு கிரகமாக இந்த வியாழன் பார்க்கப்படுகிறது. தனுசு ராசிக்காரர்களின் குணங்களை பொறுத்தவரையில், இவர்கள் சுதந்திரத்தை விரும்புபவர்கள், சாகச பிரியர்கள். புதிய விஷயங்களை ஆராய்வதிலும், சவால்கள் நிறைந்த பணிகளை செய்வதிலும் ஈடுபாடு கொண்டவர்கள்.

விஷயங்களை ஆராய்வதில் ஆர்வம் காட்டும் அதேநேரம், வேடிக்கையாகவும், நகைச்சுவை உணர்வுடனும் இருக்க கூடியவர்கள். காதல் உறவுக்கான தேடலில் தங்கள் குணத்துடன் ஒத்துப்போகும், ஒரு ஆத்ம உறவை இவர்கள் தேடுகின்றனர். மறுபுறம் கன்னி ராசிக்காரர்களும் வேடிக்கையானவர்கள், சாகசம் நிறைந்த விஷயங்களில் ஆர்வம் செலுத்த கூடியவர்கள்.

ஆனால், தன்னிச்சையாக செயல்பட விரும்புபவர்கள். தனது விருப்பங்களுடன் தனுசு ராசிக்காரர்களின் விருப்பங்கள் ஒத்துப்போகும் நிலையிலும், அவர்களுடன் இணைந்து பயணிக்க சிறிது தயக்கம் காட்டுகின்றனர். இதனை விளைவாக இரண்டு ராசிக்கும் இடையே உண்டாகும் இடைவெளி, இவ்விரு ராசிகளையும் பொருந்தாத ராசிகளாக அடையாளப் படுத்துகிறது.

Trending News

Latest News

You May Like