ஜோதிடம் அறிவோம் : இந்தக் கிழமையில் பிறந்தவங்க புத்திசாலியா இருப்பாங்கலாம்..!
பிறந்த கிழமையை வைத்து ஒருவரின் ஆளுமையை சொல்ல முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?
திங்கட்கிழமை பிறந்தவர்களின் ஆளுமை பண்புகள்: நீங்கள் திங்கட்கிழமை பிறந்தவர் என்றால் நீங்கள் அடக்கமானவராகவும், அமைதியானவராகவும், இரக்க குணம் கொண்டவராகவும் இருப்பீர்கள். நீங்கள் சென்சிட்டிவான நபர் மற்றும் எந்த விஷயத்திலும் சட்டென்று முடிவெடுக்க மாட்டீர்கள். பெரும்பாலும் தாமதமாக முடிவெடுக்கும் பழக்கம் உடையவராக இருப்பீர்கள். உங்கள் குடும்ப உறவுகள் மீது பாசம் அதிகம் கொண்டவராக இருப்பீர்கள் மற்றும் எப்போதும் அவர்களை சுற்றி நீங்களும், உங்களை சுற்றி அவர்களும் இருக்க வேண்டும் என்று விரும்புவீர்கள். அதே போல மனரீதியாக நீங்கள் ஒருநிலையாக இருக்க மாட்டீர்கள். ஒரு விஷயத்தில் நீண்ட நேரம் உங்களால் கவனம் செலுத்த முடியாது.
செவ்வாய்கிழமை பிறந்தவர்களின் ஆளுமை பண்புகள்: இந்த கிழமையில் பிறந்த நீங்கள் சுறுசுறுப்பானவர் மற்றும் உண்மையுள்ளவராக இருப்பீர்கள். நீங்கள் ஒழுக்கத்தை கடைபிடிக்க மற்றும் திறந்த மனதுடன் இருக்க விரும்புவீர்கள். நீங்கள் ஒரு ஆற்றல்மிக்க நபராக வலிமையானவராக இருந்தாலும் உங்களிடம் கருணை குணம் நிறைந்திருக்கும். சில நேரங்களில் தைரியமாக செயல்படும் நீங்கள் பல நேரங்களில் பொறுமையற்றவராக இருப்பீர்கள். உங்களின் பேச்சை பிறரை எளிதில் கேட்க வைப்பீர்கள். பேசுவதற்கு முன் யோசித்து பேசும் பழக்கம் உங்களிடம் இருக்காது. உங்கள் மீதான விமர்சனங்களை ஏற்று கொள்ள மாடீர்கள். இயல்பிலேயே அப்பாவியான நீங்கள் அதிக கோபம் கொண்டாலும் யாரையும் அவ்வளவு சீக்கிரம் வெறுக்க மாட்டீர்கள்.
புதன்கிழமை பிறந்தவர்களின் ஆளுமை பண்புகள்: புதன்கிழமையில் பிறந்த நீங்கள் விதிவிலக்கான தகவல் தொடர்பு திறனை கொண்டிருப்பீர்கள். புத்திசாலித்தனமாகவும், அறிவாற்றல் மிக்கவராகவும் செயல்படுவீர்கள். உங்கள் இலக்குகளை அடைவதில் நீங்கள் அதிக கவனம் செலுத்துவீர்கள். அட்வென்ச்சர் அனுபவங்களை நீங்கள் தேடி செல்வீர்கள். ஒரே நேரத்தில் பல வேலைகளையும் செய்து முடிக்கும் திறமையை கொண்டிருப்பீர்கள். தோல்வி மற்றும் ஆபத்துகளை கண்டு துவளாமல் உங்கள் பாதையில் முன்னேறி செல்வதில் முனைப்புடன் இருப்பீர்கள். குடும்பத்தினருக்காக எதையும் செய்ய தயாராக இருப்பீர்கள்.
வியாழக்கிழமை பிறந்தவர்களின் ஆளுமை பண்புகள்: வியாழனன்று பிறந்த நீங்கள் மிகவும் கவர்ச்சிகரமான ஆளுமை பண்புகளை கொண்டவராக இருப்பீர்கள். உங்களிடம் பழகும் நபர்களை எளிதில் ஈர்ப்பீர்கள். லட்சியவாதி மற்றும் மகிழ்ச்சியான நபர் என்பதை இந்நாள் வெளிப்படுத்துகிறது. மிகவும் சென்சிட்டிவானவர் மற்றும் மனிதநேயமிக்கவராக இருப்பீர்கள். எப்போதும் பாசிட்டிவாக சிந்தனை செய்யும் செய்யும் நீங்கள், நம்பிக்கையுடன் இருப்பீர்கள். மேலாண்மை, தலைமைத்துவம் போன்ற விஷயங்களில் திறமை கொண்டவராக இருப்பீர்கள். குடும்பம் மீது அளவுகடந்த பாசம் கொண்டிருப்பீர்கள்.
வெள்ளிக்கிழமை பிறந்தவர்களின் ஆளுமை பண்புகள்: வெள்ளிக்கிழமை பிறந்திருந்தால் நீங்கள் துடிப்பான, நேர்மறையான, மகிழ்ச்சியான நபராக இருப்பீர்கள். பொதுவாக விவாதங்களிலிருந்து விலகி இருக்க விரும்புவீர்கள். முக்கியமான நேரங்களில் ஒளிவுமறைவின்றி மிகவும் வெளிப்படையாக பேசி விடுவீர்கள். புதுப்புது விஷயங்களில் ஆர்வம் செலுத்துவீர்கள். பார்ட்டி மற்றும் ஷாப்பிங் போன்றவை உங்களின் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றாலும் கூட மிதமாகவே அவற்றில் ஈடுபடுவீர்கள்.இன்பம் மற்றும் ஆடம்பர விஷயங்களை விரும்பும் நீங்கள் அடிக்கடி சோம்பல் கொள்வீர்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை அனுபவிக்கும் விஷயங்களை செய்து கொள்ள பேரார்வம் இருக்கும்.
சனிக்கிழமை பிறந்தவர்களின் ஆளுமை பண்புகள்: இந்த கிழமையில் பிறந்த நீங்கள் பிடிவாத குணம் கொண்டவராக, கண்டிப்பானவராக மற்றும் கடின உழைப்பாளியாக இருப்பீர்கள். உங்களிடம் அபாரமான மன உறுதி காணப்படும். ஒரு வேலையை எடுத்தால் அதை செய்து முடிக்கும் வரை ஓய மாட்டீர்கள். உங்கள் வாழ்வில் பல போராட்டங்களை சந்தித்தாலும் உங்கள் தீவிர மற்றும் கடின உழைப்பால் உங்கள் விதியை மாற்றும் முயற்சியை கைவிட மாட்டீர்கள். நீங்கள் மிகவும் பொறுப்பானவராக மற்றும் முதிர்ச்சியுடன் இருப்பீர்கள். உங்கள் கடமைகளை நிறைவேற்றுவதில் உறுதியானவராகவும் திகழ்வீர்கள்.
ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்களின் ஆளுமை பண்புகள்: நீங்கள் மிகவும் நகைச்சுவை மற்றும் நம்பிக்கையுணர்வு கொண்டவர். மனதில் உற்சாகமாகவும், தோற்றத்தில் நேர்த்தியாக இருப்பீர்கள். உங்களது ஆளுமை பண்புகளால் பலரையும் கவருவீர்கள். தொட்டது துலங்கும் என்பதற்கு ஏற்ப வாழ்வில் நிறைய வெற்றிகளை பெறுவீர்கள். தைரியமான, தீர்க்கமான, சுதந்திரமான, கண்ணியமான மற்றும் அதிகாரம் மிக்க நபராக இருப்பீர்கள். இயல்பிலேயே ஆக்கப்பூர்வமான நபர் என்பதால் பல விஷயங்களில் நீங்கள் தனித்து தெரிவீர்கள். உங்களது தொழில் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும்.