1. Home
  2. தமிழ்நாடு

கிளிக்கு தடை விதிக்கப்பட்டதால் எலி ஜோதிடத்திற்கு மாறிய ஜோதிடர்..!

1

வன உயிரினங்கள் பாதுகாப்பு சட்டம் 1972-ன் படி பட்டியலிடப்பட்டுள்ள உயிரினங்களை வீட்டில் வளர்க்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. அந்த பட்டியலில் பச்சைக்கிளியும் உள்ளது. அதன் அடிப்படையில், தற்போது வீட்டில் பச்சைக்கிளியை வளர்த்து வந்த நபர்கள் மற்றும் பச்சை கிளியை வைத்து சோசியம் பார்க்கும் நபர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அவர்களிடம் உள்ள பச்சைக்கிளிகளை வனத்துறையினர் ஒப்படைக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அந்த வகையில், ஏராளமான நபர்கள் தாங்கள் வீட்டில் வளர்த்து வரும் பச்சைக்கிளியை வனத்துறையினரிடம் ஒப்படைத்து வரும் சூழலில், பச்சைக்கிளியை நம்பி கிளி ஜோசியம் பார்த்து வந்த பலர் தங்களது வயிற்றுப் பிழைப்புக்கு வழி தெரியாமல் தவித்து வருகின்றனர்.

இந்த சூழலில், வருட காலமாக பச்சைக்கிளியை வைத்து சோசியம் பார்த்து வந்த ஒரு நபர் "நீங்க, எங்க கிளியை தானே எங்கிட்ட இருந்து பறிப்பீங்க…, நாங்க எலியை வைத்து சோசியம் பார்ப்போம்…" என புதுவிதமான முயற்சியில் இறங்கி தற்போது வெள்ளெலியை வைத்து ஜோசியம் பார்த்து வருகிறார்.ஆணைப்பட்டியில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோயில் வளாகத்தில் முருகேசன் என்பவர் வளர்ப்பு எலியை வைத்து ஜோதிடம் பார்த்து வருகிறார்.


 

Trending News

Latest News

You May Like