22,333 கிமீ வேகத்தில் இன்று பூமியை நோக்கி வரும் சிறுகோள்..!
விண்வெளியில் உள்ள 880 அடி அரங்கம் அளவிலான சிறுகோள் ஒன்று மணிக்கு 22,333 கிமீ வேகத்தில் வெள்ளிக்கிழமை (இன்று) பூமியை நோக்கி வருகிறது என நாசா தெரிவித்துள்ளது.
இந்த சிறுகோள் இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு பூமியை நோக்கி பறக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் நாசா கூறியுள்ளது. இந்த சிறுகோளுக்கு, 2011 AM24 என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும், இது அப்பல்லோ சிறுகோள் குழுவின் ஒரு பகுதியாகும்.