கொரோனாவிற்கு காவல் உதவி ஆய்வாளர் பலி!!

சென்னையில் கொரோனா வைரஸ் நோயின் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த காவல் உதவி ஆய்வாளர் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த தலைமை செயலக காலனி காவல் நிலையத்தில், உதவி ஆய்வாளராக இருந்த பாபு என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு மூச்சு விடுவதில் பிரச்சனை ஏற்பட்ட நிலையில், கடந்த 3ஆம் தேதி அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பாபு உயிரிழந்தார்.
மக்கள் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் பலரை இந்த கொரோனா காவு வாங்கியுள்ளது . மருத்துவர்கள், செவிலியர்கள், சட்டப்பேரவை உறுப்பினர் என உயிர்காக்கும், சேவைப் பணியில் ஈடுப்பட்டிருந்த பலரும் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in