1. Home
  2. தமிழ்நாடு

சொத்து குவிப்பு வழக்கு !! சசிகலா ஆகஸ்ட் 14 - ல் சிறையில் இருந்து வெளி வருகிறார்...பா.ஜ.க முக்கிய பிரமுகர் டிவிட்..

சொத்து குவிப்பு வழக்கு !! சசிகலா ஆகஸ்ட் 14 - ல் சிறையில் இருந்து வெளி வருகிறார்...பா.ஜ.க முக்கிய பிரமுகர் டிவிட்..

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேரும் மேல் முறையீடு செய்தனர்.

இதையடுத்து அந்த வழக்கில் நால்வரையும் கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது. இதை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், 4 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம் என தீர்ப்பை உறுதி செய்தது.

சொத்து குவிப்பு வழக்கு !! சசிகலா ஆகஸ்ட் 14 - ல் சிறையில் இருந்து வெளி வருகிறார்...பா.ஜ.க முக்கிய பிரமுகர் டிவிட்..

ஆனால், அதற்கு முன்னதாகவே ஜெயலலிதா காலமானார். சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடைக்கப்பட்டனர்.

நன்னடத்தை விதிகளின்படி சசிகலாவை தண்டனை காலத்துக்கு முன்பாகவே சிறையில் இருந்து வெளியே கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்பட்டன. ஆனால், பெங்களூரு சிறையில் உள்ள நன்னடத்தை விதிமுறைகள் சசிகலாவுக்கு பொருந்தாது.

தண்டனை காலம் முடிந்த பிறகே சசிகலா விடுதலை செய்யப்படுவார் என்று கர்நாடக சிறைத்துறை இயக்குநராக இருந்த என்.எஸ்.மெகரிக் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் , கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர் சசிகலா எப்போது விடுதலை செய்யப்படுவார் என ஆர்.டி.ஐ வழியாக கர்நாடக சிறைத் துறையிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

Trending News

Latest News

You May Like