1. Home
  2. தமிழ்நாடு

உங்கள் அரசியல் நாடகத்திற்கு சட்டசபையை பயன்படுத்த கூடாது - அண்ணாமலை விமர்சனம்..!

Q

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
தி.மு.க., கூட்டணி எம்எல்ஏக்கள் கருப்பு பேட்ஜ் அணிந்திருப்பதும், வக்பு திருத்தச்சட்ட மசோதாவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தை நாடுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தது எதிர்பார்த்ததுதான். வக்பு மசோதா எதிர்ப்பு சிறுபான்மையினர் வாக்கு வங்கியை காப்பாற்றும் நாடகம்.
முந்தைய வக்பு சட்டத்தால் ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள் பாதிக்கப்பட்டதை தமிழக முதல்வர் உணரவில்லையா? தயவு செய்து உங்கள் அரசியல் நாடகத்திற்கு சட்டசபையை பயன்படுத்த கூடாது. முதல்வர் ஸ்டாலினின் தொடர்ச்சியான நாடகம், அடுத்த ஆண்டு தேர்தலுக்கு முன்பு'2025 வக்பு மசோதாவை எதிர்க்க அப்பாவின் முயற்சிகள்' என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுத முடியும்.
இதை ஒரு தேர்தல் தளமாக்கி, 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் மற்றும் 2029ம் ஆண்டு லோக்சபா தேர்தல்களில் முஸ்லிம்களை தவறாக வழிநடத்தவும், ஏமாற்றவும் பிரிக்கவும் மட்டுமே தி.மு.க.,வுக்குத் தெரியும்."
இவ்வாறு அதில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like