‘கேரளம்’ என பெயர் மாற்ற சட்டப்பேரவையில் 2-வது முறையாக தீர்மானம்..!

கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் சட்டப்பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது: மலையாளத்தில் ‘கேரளம்’ என்ற பெயரிலும், பிற மொழிகளில் ‘கேரளா’ என்ற பெயரிலும் நமது மாநிலம் அழைக்கப்படுகிறது.
ஆனால், நமது மாநிலத்தின் பெயர் அரசியலமைப்பு சட்டத்தின் முதல் அட்டவணையில் ‘கேரளா’ என்றே எழுதப்பட்டுள்ளது. எனவே, அரசியலமைப்பின் 3-வது பிரிவின்கீழ் இதை ‘கேரளம்’ என்று திருத்தம் செய்து உடனடி பெயர் மாற்றத்துக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமாறு இந்த பேரவை ஒருமனதாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
இந்நிலையில் கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு திருப்பி அனுப்பிய நிலையில், கேரள சட்டப்பேரவையில் 2-வது முறையாக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!