3 கட்டங்களாக ஜம்மு -காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல்..!
இந்திய தலைமைத் தேர்தல் ஆணைய ஆணையர் ராஜ்குமார் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து நடைபெற இருக்கும் தேர்தல் குறித்து விளக்கங்கள் அளித்து வருகிறார். செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 என மூன்று கட்டங்களாக ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதாக அறிவித்துள்ளார்.
அக்டோபர் 1ம் தேதி ஹரியானாவில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 4ம் தேதி ஜம்மு காஷ்மீர், ஹரியானாவில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ஜம்மு காஷ்மீரில் தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு பாதுகாப்பு கவச உடை வழங்கப்படும் என்பது உட்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு தொடர்ந்து நேரலையில் பேசி வருகிறார்.