திட்டமிட்டபடி அக். 27ம் தேதி மாநாடு நடைபெறும் - புஸ்ஸி ஆனந்த்..!
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய், கட்சிக் கொடி மற்றும் கொடிப் பாடலையும் ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து, தவெக மாநாடு விரைவில் நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் செப்டம்பர் 23 ஆம் தேதி தவெக நடத்தப்படும் மாநாட்டுக்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு கோரி அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறைக்கு கடிதம் அளித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து, மாநாட்டுக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு அதற்குப் பதிலளிக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பதில் அளிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், மாநாடு எப்போது என்பது குறித்து வெளியிடப்படாமலேயே இருந்தது. இந்நிலையில், விக்கிரவாண்டியில் அக்டோபர் 27ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெறும் என விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்திய நாள் முதல் நம் கழகத் தோழர்களின் எண்ணங்களுக்கு ஏற்பவும் தமிழக மக்களின் பேரன்புடனும் பேராதரவுடனும் நமது அரசியல் வெற்றிக்கான களம் விரிவடைந்து கொண்டே வருகிறது. கழகக் கொடியேற்று விழாவின் போது நமது முதல் மாநில மாநாட்டுத் தேதியை அறிவிப்பதாக கூறியிருந்தோம். நமது மக்களின் பெரும் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றும் வகையில் தமிழக அரசியல் களத்தில் புதிய நம்பிக்கையை விதைக்கக் கூடிய நமது கழகத்தின் கொள்கைத் தலைவர்கள், கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த செயல் திட்டங்களைப் பிரகடனப்படுத்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு. வரும் அக்டோபர் 27ஆம் தேதி மாலை 4 மணிக்கு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடைபெறுகிறது என்பதைப் பெருமகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து, காவல் துறை விதித்த 32 நிபந்தனைகளுக்கான பதில் கடிதத்தை தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், கூடுதல் கண்காணிப்பாளர் திருமாலிடம் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் இன்று வழங்கினார். அதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாடு அக்டோபர் 27 ஆம் தேதி நடைபெறும என்று தலைவர் விஜய் அறிவித்திருந்தார். மாநாடு தொடர்பாக காவல் துறை சார்பில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு பதில் அளிக்குமாறும், விளக்கம் அளிக்குமாறும் கூறியிருந்தனர். அவர்கள் எழுப்பியிருந்த கேள்விகளுக்கு விளக்கம் அளித்து கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. தவெக மாநாடு சிறப்பான மாநாடாகவும், வெற்றி மாநாடாகவும் நடைபெறும். இந்த மாநாட்டில் யார், யார் பங்கேற்கிறார்கள் என்பது குறித்த தகவலை தலைவர் விஜய் அறிவிப்பார். விக்கிரவாண்டியில் திட்டமிட்டபடி அக்டோபர் 27 ஆம் தேதி மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்கி நடைபெறும் என்றார்.