இந்த தேதியில் ரூ. 2000 மதிப்புள்ள நோட்டுகளை மாற்ற முடியாது..!
இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 2023 ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி ரூ. 2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்தது. அதன்படி, ரூ.2000 மதிப்புள்ள நோட்டுக்களை வங்கி மற்றும் தபால் நிலையங்கள் மூலமாக பொது மக்கள் மாற்றம் செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது வரையிலும் பலரும் ரூ. 2000 நோட்டுகளை மாற்றாமல் வைத்திருக்கும் நிலையில் பொதுமக்கள் ரிசர்வ் வங்கியின் அலுவலகங்களுக்கு நேரடியாக சென்று ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன்படி, தற்போது வரையிலும் ரிசர்வ் வங்கியின் அலுவலகங்கள் மூலமாக ரூ. 2000 மதிப்புள்ள நோட்டுக்கள் திரும்ப பெறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் பிரம்மாண்ட கும்பாபிஷேக விழா வரும் ஜனவரி 22ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில், கும்பாபிஷேக தினத்தை ஒட்டி நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகள், கிராமப்புற வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் அனைத்து நிதி நிறுவனங்களுக்கும் அரை நாள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. எனவே, ஜனவரி 22ஆம் தேதி ரூ. 2000 நோட்டுக்களை வங்கிகளின் மூலமாக மாற்ற முடியாது எனவும், ஜனவரி 23ஆம் தேதி முதல் வழக்கமாக ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.