1. Home
  2. தமிழ்நாடு

தமிழக அரசியலைப் பொறுத்தவரை அண்ணாமலை ஒரு பூஜ்ஜியம் - எஸ்.வி சேகர் அட்டாக்..!

1

கும்பகோணத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்வி சேகர்,,"அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்றத்திற்கு நடைபெறும் தேர்தலிலும் திமுக மிக அதிக இடங்களில் வெற்றி பெறும் ஆட்சி அமைக்கும்.

நாடாளுமன்ற மறு சீரமைப்பின் போது வட மாநிலங்களுக்கு எந்த விகிதாச்சார அடிப்படையில் தொகுதிகள் ஒதுக்கப்படுகிறதோ அதே விகிதாச்சாரப் படி தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கும் தொகுதிகள் கிடைக்க வேண்டும். திமுக தலைமை கேட்டுக் கொண்டால் திமுகவிற்காக பிரச்சாரம் செய்வேன். ஆனால் எந்த அரசியல் கட்சியிலும் இனி நான் சேரப் போவதில்லை. கர்நாடக மாநிலத்தில் அண்ணாமலை காவல்துறை அதிகாரியாக இருந்தபோது அவரை பணியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்கு முன்னதாக இவர் முந்திக் கொண்டு பதவியை ராஜினாமா செய்தார். தமிழகத்தில் பாஜகவுடன் எந்த கட்சி கூட்டணி அமைத்தாலும் அது மண்ணை கவ்வும். போன முறையாவது அதிமுக தயவால் பாஜக 4 சீட்களில் வென்றது. இந்த முறை அதுவும் கிடைக்காது. 

தமிழகத்தை பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சி வளரவே இல்லை என்பது தான் உண்மை. பாஜக தமிழ்நாட்டில் ஒரு வீக்கம் மாதிரி இருக்கிறது. பலூனை ஊதினால் பெரிதாகும். ஆனால் அதில் ஒன்றுமே இருக்காது. அது போல தான் பாஜகவிலும் ஒன்றுமே இல்லை. 2026-ல் பாஜக புஸ் என்று போய்விடும். அண்ணாமலை ஒரு உளறல் பேர்வழி. அவருக்கு வாய் மட்டும் தான் இருக்கிறது.

பேசுவது எல்லாம் பொய் அவரது அரசியல் தமிழ்நாட்டில் நடக்காது. அண்ணாமலை தமிழக அரசியலைப் பொறுத்தவரை ஒரு பூஜ்ஜியம். அவருக்கு அரசியலைப் பற்றி ஒன்றுமே தெரியாது. அண்ணாமலை சொல்வதைக் கேட்டு அர்ஜுன் சம்பத் பேசிக் கொண்டிருக்கிறார். அர்ஜுன் சம்பத் ஏற்கனவே பாஜகவில் இணைந்ததை போல தான் இருக்கிறார். அவர் நடத்தும் மாநாடுகள் எல்லாம் வேஸ்ட். முதலில் அவரது சமூகத்தை பாதுகாக்கட்டும். அப்புறமாக பிராமணர் சமூகத்திற்கு வரட்டும். பிராமணர்கள் யாரும் அவரிடம் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடையவில்லை

நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஆன விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார். ப்ரோ ப்ரோ என அவர் பேசுவதை எல்லாம் ரசிகர்களுக்கு கட்டாயம் பிடிக்கும் தான். ஆனால் அது ஓட்டுக்களாக மாறுமா? என தெரியாது. ரசிகர்கள் தங்களுக்க்கு பிடித்த நடிகர்களுக்கு கட் அவுட் பாலபிஷேகம் என எல்லாம் செய்வார்கள். ஆனால் கட்சி ஆரம்பிக்கும் போது அவர் தான் தொண்டர்களுக்கு செய்ய வேண்டும். மக்களை நேரில் சந்திக்க வேண்டும். களத்துக்குச் செல்ல வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களை சுற்றி வர வேண்டும். அப்போது தான் எவ்வளவு ஓட்டு கிடைக்கும் என்பது தெரியும். இல்லை என்றால் நானும் அரசியலில் இருக்கிறேன் என சீமான் போல சுற்றி திரிய வேண்டியது தான்" என பேசினார்.

Trending News

Latest News

You May Like