லாக்டவுனில் சைலன்ட்டாக 2ஆவது திருமணம் செய்து கொண்ட ஆர்யா பட நாயகி!

நடிகர் ஆர்யாவின் படத்தில் நடித்த நடிகை ஒருவர் பொதுமுடக்க காலத்தில் சத்தமில்லாமல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆர்யா, நவ்தீப் நடித்த அறிந்தும் அறியாமலும் படத்தில் நடித்த நடிகை சமிக்ஷா கார்த்திகை, பஞ்சாமிர்தம், முருகா, தீ நகர், மெர்க்குரி பூக்கள் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இந்தி டிவி தொடர்களிலும் நடித்துவரும் இவர், பாப் பாடகரும் தொழிலதிபருமான ஷாயல் ஓஸ்வால் என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் கடந்த 3 ஆம் தேதி சிங்கப்பூரில் திருமணம் செய்துகொண்டனர். நடிகை சமிக்ஷாவுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து 10 வயதில் ஒரு மகன் இருக்கிறார். ஷாயலுக்கும் தனது முதல் மனைவி மூலம் 2 பிள்ளைகள் இருக்கின்றனர். இந்நிலையில் இருவரும் இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
newstm.in