1. Home
  2. தமிழ்நாடு

அருண் ஜெட்லி மகன் ரோஹன் ஜெட்லிக்கு புதிய பொறுப்பு..?

Q

ஐசிசியின் தலைவராக இருக்கும் பார்கிளேவின் பதவிக் காலம் இந்த மாத இறுதியுடன் நிறைவு பெறுகிறது.
ஏற்கனவே பார்கிளேவின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் மீண்டும் ஐசிசியின் தலைவராக தொடர விரும்ப வில்லை என தெரிவித்தார். இதையடுத்து அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. இதில் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா போட்டியின்றி அண்மையில் ஐசிசி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக ஜெய்ஷா தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அடுத்த செயலாளர் என்ற கேள்வி கடுமையாக எழுந்தது. முன்னாள் ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா, முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாகூரின் தம்பி அருண் துமால், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் மகன் ரோகன் ஜெட்லி ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைப் பட்டியலில் எதிரொலித்தன.
இந்நிலையில், பிசிசியின் அடுத்த செயலாளராக அருண் ஜெட்லியின் மகன் ரோகன் ஜெட்லியை நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ரோகன் ஜெட்லி டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. ரோகன் ஜெட்லி நியமனம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல் கூறப்படுகிறது.

Trending News

Latest News

You May Like