ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மேலும் 3 மாதம் அவகாசம்!

ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மேலும் 3 மாதம் அவகாசம்!

ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மேலும் 3 மாதம் அவகாசம்!
X

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மேலும் 3 மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை தமிழக அரசு கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி அமைத்தது.

அதனைத் தொடர்ந்து சசிகலா, சசிகலா உறவினர்கள், போயஸ்கார்டன் பணியாளர்கள், ..எஸ்., .பி.எஸ். அதிகாரிகள், அப்பலோ மருத்துவமனை மருத்துவர்கள், பணியாளர்கள் என 150க்கும் மேற்பட்டோரிடம் ஆணையம் விசாரணை நடத்தியது.

விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் அவ்வப்போது ஆறுமுகசாமி ஆணையம் கால அவகாசம் கோருவது வழக்கம். அதன்படி தமிழக அரசும் அவகாசம் அளித்து வந்தது. 8 முறை அவகாசம் கோரிய நிலையில் தொடர்ந்து தமிழக அரசு அனுமதி அளித்தது.

இந்நிலையில் மேலும் 3 மாதம் அவகாசம் கேட்டு கடந்த வாரம் தமிழக அரசுக்கு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் எழுதியது. இன்றுடன் ( 24.10.20) ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அவகாசம் முடியும் நிலையில் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டது..

இதனையடுத்து கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு 9ஆவது முறையாக ஆறுமுகசாமி ஆணையத்துக்கு அவகாசம் வழங்கியுள்ளது.

newstm.in

Next Story
Share it