ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மேலும் 3 மாதம் கால அவகாசம் நீட்டிப்பு !

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மேலும் 3 மாதம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த புகாரின் பேரில் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் 3 மாதத்திற்குள் விசாரணை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதையடுத்து, ஆணையத்தின் விசாரணை தீவிரமாக நடைபெற வந்தது.
இந்த நிலையில், மருத்துவ குழு அமைத்து விசாரணை செய்ய அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்தது. மேலும், இந்த வழக்கில் ஆறுமுகசாமி விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், இந்த வழக்கு விசாரணை தற்போது நிலுவையில் உள்ளது.
மூன்று மாதத்தில் அறிக்கை சமர்பிக்க உத்தரவு பிறக்கப்பட்டு, பல்வேறு காரணமாக 30 மாதங்களுக்கு மேல் விசாரணை ஆணையம் விசாரணை நடத்தப்படாமல் இருந்து வருகிறது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு 8-வது கால அவகாசம் இன்றோடு முடிந்த நிலையில், 9-வது முறையாக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.