விற்பனைக்கு வந்த கலைஞர் ரூ.100 நாணயம்..! விலை எவ்வளவு தெரியுமா ?
கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவின் அடையாளமாக 100 ரூபாய் நாணயத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வெளியிட்டார்.
நீதி, சமூக முன்னேற்றம் ஆகியவற்றுக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட அவரது வாழ்க்கைக்கு இது ஒரு புகழஞ்சலியாகும். இது நமது நன்றியுணர்வின் அடையாளமாகும். அவர் முன்வைத்த மதிப்புகளை நினைவூட்டும் செயல்பாடாகும். இந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், மாநில அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார் ராஜ்நாத்சிங்.
இதையடுத்து, ரிசர்வ் வங்கியின் நாணயம் விற்பனை செய்யும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 100 ரூபாய் நாணயம் ரூ.4,180 விலையில் மத்திய அரசு விற்பனை செய்ய உள்ளது. https://www.indiagovtmint.in/en/product/birth-centenary-of-kalaignar-m-karunanidhi-rs-100-unc-coin-3-folder-pack/ என்ற இணையதளத்தில் நாணயத்தை வாங்கலாம்.
கலைஞர் நினைவு நாணயம் ₹10,000த்திற்கு விற்பனை செய்யப்படும் என்று கூறப்பட்ட நிலையில் மத்திய அரசு இதனை ₹2,500க்கு விற்க விலை நிர்ணயம் செய்தது.ஆனால், தற்போது இந்திய அரசு காசாலை இணையத்தில் ₹4,180க்கு விற்பனை துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.