தொடரும் ஆணவக் கொலை! முட்புதரில் இளைஞரின் சடலம் மீட்பு!!
தொடரும் ஆணவக் கொலை! முட்புதரில் இளைஞரின் சடலம் மீட்பு!!

எட்டு ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், மாப்பிள்ளையை பெண்ணின் தந்தை கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தை சேர்ந்த ஹேமந்த் என்ற இளைஞரும், அதே பகுதியைச் சேர்ந்த அவந்தி (26) என்ற பெண்ணும் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள். அதனால் பெண் வீட்டில் இருவரின் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் பெண்ணின் பெற்றோரின் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதனால் பெண்ணின் தந்தை முரளி கிருஷ்ணா ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
ஆனால் அதை காட்டிக் கொள்ளாமல் இருவரும் திருமணம் செய்து கொண்டதை ஒப்புக் கொண்டது போல் நடித்து ஹேமந்த்தை பெண்ணின் தந்தை கொலை செய்தார். ஹைதராபாத் அருகே நகரம் பகுதியில் ஒரு முட்புதரில் ஹேமந்த் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதையடுத்து போலீசார் பிணத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக அவந்தியின் தந்தை, தாய் மாமன்கள் விஜய், யுகேந்திரா உட்பட 12 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in