1. Home
  2. தமிழ்நாடு

பாஸ்கர் ஒரு ராஸ்கல் பட தயாரிப்பாளருக்கு எதிராக பிடிவாரண்ட்..!

1

நடிகர் அரவிந்த்சாமி நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் பாஸ்கர் ஒரு ராஸ்கல். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தில் நடித்தற்கான சம்பளத்தை முழுமையாக தராமல் இருந்ததற்காக அப்படத்தின் தயாரிப்பாளர் மீது அரவிந்தசாமி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்த நிலையில்,  சம்பள பாக்கி தொகையை வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் வழங்காததால், உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த கோரியும், தயாரிப்பாளருக்கு சொந்தமான சொத்துக்களை அறிவிக்க உத்தரவிடக் கோரியும், நடிகர் அரவிந்த் சாமி வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய கால தாமதம் செய்ததாக கூறி, தயாரிப்பாளருக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது. 

இந்த விஷயம் கோலிவுட்டில் பேசும் பொருளாக மாறியுள்ளது. 

Trending News

Latest News

You May Like