வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு பிடி வாரண்ட்!
வங்காள தேசத்தில் தியாகிகளின் குடும்ப வாரிசுகளுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன் முறை வெடித்தது. இதில் 400-க்கும் மேற்பட்டவர்கள் உயிர் இழந்தனர். இதன் எதிரொலியாக பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து அங்கு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது.அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பலர் கொல்லப்பட்டதால் ஷேக் ஹசீனா மற்றும் அவரது மந்திரி சபையில் இடம் பெற்று இருந்த மூத்த மந்திரிகள், பதவி நீக்கம் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரிகள் என 10 பேர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது.
அவர்கள் மீது இனப்படுகொல, சித்ரவதை உள்ளிட்டவை தொடர்பாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் ஷேக் ஹசீனாவுக்கு அந்நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் பிடி வாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது