நடிகை குஷ்புவை கைது செய்! ஆர்பாட்டம் நடத்திய விசிக நிர்வாகிகள் !

அரியலூர் மாவட்டம் செந்துறை விடுதலை சிறுத்தை கட்சியினர் நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்புவை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்பியை இழிவு படுத்தி பேசிய நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்புவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை குஷ்புவை உடனே கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், அவருக்கு எதிராகவும், பாஜகவுக்கு எதிராகாவும் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.