அர்னால்டுக்கு அறுவை சிகிச்சை..!

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வார்ஷ்னேஜர், டெர்மினேட்டர் மற்றும் கோனான் தி பார் பேரியன் ஆகிய படங்களின் மூலம் புகழ்பெற்றவர். ஆஸ்திரிய வம்சாவளியை சேர்ந்த அர்னால்டு கடந்த 2003 முதல் 2011-ம் ஆண்டு வரை 2 முறை கலிபோர்னியாவின் கவர்னராக பதவி வகித்துள்ளார்.
இவருக்கு இரதய வால்வில் சிறு பிரச்னை இருந்ததால் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள சீடர்ஸ்-சினாஸ் மருத்துவமனையில் இதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
இந்நிலையில், அர்னால்டுக்கு (76) இதயத்தில் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவருக்கு பேஸ் மேக்கர் வைத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு பின்னர் தான் நலமுடன் இருப்பதாக அர்னால்டு புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். உடலை கட்டுக் கோப்பாக வைக்க, பல இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கியவர். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப ரசிர்கள் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்