ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் விழுந்ததில் 3 வீரர்கள் உயிரிழப்பு..!
ராணுவ செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட தகவலில், “வடக்கு காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் சனிக்கிழமை (ஜன4) நடந்த சாலை விபத்தில் மூன்று வீரர்கள் இறந்தனர். இரண்டு பேர் காயமடைந்தனர். சீரற்ற வானிலை மற்றும் மோசமான பனிபொழிவு காரணமாக வாகனம் சறுக்கி பள்ளத்தாக்கில் விழுந்தது. காயமடைந்த வீரர்கள் உள்ளூர்வாசிகளின் உதவியுடன் மருத்துவ சிகிச்சைக்காக உடனடியாக மீட்கப்பட்டனர். உடனடியாக உதவி வழங்கிய குடிமக்களுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம்” என்றார்.