1. Home
  2. தமிழ்நாடு

அலெர்ட் மோடில் ராணுவம்..!பாகிஸ்தானிலிருந்து சீக்ரெட் மெசேஜ் உடன் வந்த புறா..!

Q

புறாவின் காலில், Jammu Station IED Blast என எழுதப்பட்டிருந்த காகிதத்தால் பரபரப்பு.

புறாவில் ஜம்முவில் ரயில் நிலையம் மீது மிக மோசமான தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் குறிப்பு இருந்துள்ளது. இந்தப் புறா இந்திய-பாகிஸ்தான் எல்லைக்கு அருகே பிடிபட்டது. இதையடுத்து ஜம்மு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜம்முவிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆர்.எஸ். புறா பகுதியில் புறாவை எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் பிடித்தனர்.

அதன் காலில் கட்டப்பட்டிருந்த ஒரு துண்டுச் சீட்டில் குண்டுவெடிப்பு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. அதில் ஜம்மு தாவி ரயில் நிலையத்தில் வரும் நாட்களில் வெடிகுண்டுத் தாக்குதல் (IED blast) நடத்தப்படும் என்ற அச்சுறுத்தும் செய்தி இருந்தது. உருது மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் அது எழுதப்பட்டு இருந்தது. உருது மொழியில் "காஷ்மீர் எங்களுடையது, நேரம் வந்துவிட்டது" என்ற வாசகம் இருந்தது. ஆங்கிலத்தில் "ஜம்மு ஸ்டேஷன் ஐஇடி குண்டுவெடிப்பு.. இதுவே முடிவு" என்றும் எழுதப்பட்டிருந்தது.

 இதையடுத்து ஜம்மு தாவி ரயில் நிலையம் மற்றும் அப்பகுதியிலுள்ள மற்ற முக்கியமான இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

Trending News

Latest News

You May Like