வயநாட்டில் ராணுவத்தால் அமைக்கப்பட்ட தற்காலிக பாலம் சேதம்..!
வயநாடு நிலச்சரிவு நாட்டையே உலுக்கிய நிலையில், பலி எண்ணிக்கை 400-ஐ தாண்டியுள்ளது. மீட்பு பணி நேற்று 8-வது நாளாக தொடர்ந்து வருகிறது. மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள் உள்ளிட்ட மீட்பு குழுவினர் மிகவும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சூரல்மலை-முண்டகை இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால், பொக்லைன் உள்ளிட்ட கனரக வாகனங்கள் ஆற்றை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் மீட்பு பணியை துரிதப்படுத்தும் வகையில் ஆற்றின் குறுக்கே ராணுவத்தினர் பெய்லி பாலம் அமைத்தனர்.
இதன் மூலம் சூரல்மலை-முண்டகை இடையே மீட்பு பணிக்காக வாகனங்கள் சென்று வந்தன. இந்நிலையில் நிலச்சரிவு பாதித்த வயநாட்டில் மீட்பு பணிக்காக ராணுவம் அமைத்த தற்காலிக பாலம் சேதமடைந்துள்ளது. பாலம் முழுமையாக சேதமானதால் நடந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வாகனம் செல்வதற்காக அமைக்கப்பட்ட பாலத்தில் சீரமைப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.