1. Home
  2. தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடிக்கு கொலை மிரட்டல்..!

1

சென்னை பெரம்பூரில் உள்ள வேணுகோபால் சுவாமி தெருவில் புதிய வீட்டை கட்டி வந்த தமிழக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அதே இடத்தில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை கடந்த ஜூலை 5ஆம் தேதி நடந்தது.

இந்த நிலையில் பெரம்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அவருடைய குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு சதீஷ் என்பவர் பெயரில் ஒரு மர்ம கடிதம் வந்துள்ளது.அதில் ஆம்ஸ்ட்ராங்கின் குழந்தையை கடத்தி, அவருடைய குடும்பத்தை கொலை செய்துவிடுவதாக மிரட்டல் வந்துள்ளது.

இதனையொட்டி சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவரும் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.  

ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியும் வழக்கறிஞர் ஆவார். இவர்களுக்கு 2 வயது ஒரு பெண் குழந்தை உள்ளது. ஆம்ஸ்ட்ராங் மறைந்ததும் பொற்கொடிக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவரும் தன்னை இனி திருமதி ஆம்ஸ்ட்ராங் என்றே அழைக்குமாறும், பொற்கொடி என்ற பெயரை பயன்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான பரபரப்பே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Trending News

Latest News

You May Like