தன் பெயரை மாற்றிய ஆம்ஸ்ட்ராங் மனைவி..! என்ன காரணம் தெரியுமா ?
ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை ஆம்ஸ்ட்ராங் இறந்த 16ஆவது நாள் காரியம் நிகழ்ந்தது. அன்றைய தினம் அவருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிலையில் தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியை தமிழகத்தில் தெரிய வைத்த பெருமை ஆம்ஸ்ட்ராங்கிற்கு உண்டு. இதனால் அவரை போன்ற ஒரு பிரபலத்தைத்தான் மாநிலத் தலைவர் பதவிக்கு மாயாவதி நியமிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
அந்த வகையில் பா.ரஞ்சித் நியமிக்கப்படுவார் என்றெல்லாம் செய்திகள் வந்தன. ஆனால் அவரோ தனக்கு விருப்பம் இல்லை என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துவிட்டார். இந்த நிலையில்தான் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக வழக்கறிஞர் பி.ஆனந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். அது போல் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி நியமிக்கப்பட்டுள்ளார். அவரும் வழக்கறிஞர் ஆவார்.
இந்த நிலையில் தன்னை பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் பிஏ பிஎல் என அழைப்பதற்கு பதிலாக திருமதி ஆம்ஸ்ட்ராங் என அழைக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது கணவர் ஆம்ஸ்ட்ராங்கையும் அவரது படுகொலையையும் நினைவூட்டவே இது போன்று அவர் பெயர் மாற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

.png)