ஆதவ் அர்ஜூனா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை..!

வரி ஏய்ப்பு, சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பான புகாரில் சென்னையின் பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை தரப்பில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னையில் ஆர்.ஏ புரம், வேப்பேரி, ஈ.சி.ஆர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை ஆர்.ஏ.புரத்தில் கரூரை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூரை சேர்ந்த செல்வராஜ் அரசு ஒப்பந்ததாரர் என சொல்லப்படும் நிலையில், ஜவுளி நிறுவனமும் நடத்தி வருகிறார். ரேஷன் பொருள் விநியோக முறைகேட்டில் செல்வராஜுக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் 7 பேர் காலை முதல் சோதனை செய்து வருகின்றனர். விசிக நிர்வாகி ஆதவ் அர்ஜூன் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.