1. Home
  2. தமிழ்நாடு

அக்டோபர் 19-ல் திரையரங்கமே வெடிக்க போகிறது - அர்ஜுன் தாஸ்..!

1

லோகேஷ் கனகராஜ், விஜய் கூட்டணியில் லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் திரிஷா, சஞ்சய்தத், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன் மன்சூர் அலிகான் உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றது. மேலும் இவர்களுடன் பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் நடிக்கிறார். மாஸ்டர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் விஜய் கூட்டணியில் நியூ திரைப்படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே மிகப் பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வருகிறது. அதனால் இது தொடர்பான செய்திகள் அவ்வப்போது வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் அதனை ரசிகர்கள் வெகுவாக சமூக வலைதளங்களில் வைலாக்குவது மட்டுமல்லாமல் கொண்டாடி வருகின்றனர்.

சமீபத்தில் விஜய் தனது படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது.இந்நிலையில் தற்போதைய தகவல்கள் என்னவென்றால், நடிகர் அர்ஜுன் தாஸ் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்தபோது, “லியோ படத்திற்கான கதைகளை விவாதிக்கும் பணியில் இருந்தேன். யார் யாருக்கு என்னென்ன கதாபாத்திரம் என்பது எனக்கு தெரியும்.

லியோ படத்தின் மீதான மிகுந்த எதிர்பார்ப்பினால் ரசிகர்கள் அனைவரும் இப்படம் LCU வில் இருக்கிறதா இல்லையா என்பதை கேட்கின்றனர். அக்டோபர் 19இல் திரையரங்கமே வெடிக்க போகிறது” என்று கூறியுள்ளார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் இருந்து நீங்கள் லியோ படத்தில் இருக்கிறீர்களா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அர்ஜுன் தாஸ் ‘அக்டோபர் 19 தியேட்டரில் தெரிந்து கொள்வீர்கள்’ என்று பதிலளித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like