1. Home
  2. தமிழ்நாடு

அர்ஜுன் தாஸ் நடித்துள்ள ‘ரசவாதி’ படத்தின் டிரைலர் வெளியீடு!

1

கைதி படத்தின் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்தவர் அர்ஜுன் தாஸ். தொடர்ந்து, வசந்த பாலன் இயக்கிய அநீதி படத்தில் அவர் நாயகனாக அறிமுகமானார். தற்போது, அவர் ரசவாதி படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனை இயக்குநர் சாந்தகுமார் இயக்கி வருகிறார். இவர் இதற்கு முன்பு மௌனகுரு, மகாமுனி ஆகிய படங்களை இயக்கியவர்.

இந்த படத்தில் நாயகியாக தன்யா ரவிச்சந்திரனும் முக்கிய கதாபாத்திரத்தில் சுஜிதா சங்கர், சுஜாதா, விஜே ரம்யா சுப்ரமணியன், ரேஷ்மா வெங்கடேஷ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். படத்துக்கு தமன் இசையமைக்கிறார். படத்தை டிஎம்ஏ மெக்கானிக் கம்பெனி தயாரிக்கிறது.

இந்த நிலையில் படத்தின் டிரைலரைப் படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. வசனங்களில்லாமல் வெறும் பின்னணி இசையுடன் கடக்கிறது ட்ரெய்லர். இறுதியில் மட்டும், “பயமில்லாம நடிக்கிறது தான் வீரம்னு சொல்லி கொடுத்திருக்காங்களா? சண்டையில சாவுறது தான் வீரம்” என்ற வசனத்தை பேசுகிறார் அர்ஜுன் தாஸ். பின்னணி இசையில் ஈர்க்கிறார் தமன். பெரும்பாலும் காதல் காட்சிகளாக நகரும் ட்ரெய்லரில் இடையிடையே சண்டைக் காட்சிகள் வந்து செல்கின்றன. அர்ஜுன் தாஸ், சிறையில் இருப்பதாக காட்டப்படுகிறது. படம் மே 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Trending News

Latest News

You May Like