உடனே உங்க மொபைல்-ஐ செக் பண்ணுங்க.. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மேல்முறையீடு செய்தவர்களுக்கு குட் நியூஸ்..!
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தின் இரண்டாம் கட்டம் வரும் நவம்பர் 10- ஆம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானப் பயனாளிகளுக்கு வரும் நவம்பர் 10- ஆம் தேதி முதல் அவர்களது வங்கிக் கணக்கில் ரூபாய் 1,000 வரவு வைக்கப்படவுள்ளது.
வரும் நவம்பர் 12- ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், நவம்பர் 10- ஆம் தேதி முதலே அனைத்து கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டப் பயனாளிகளுக்கும் ரூபாய் 1,000 அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தில் மேல்முறையீடு செய்தவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடங்கியது. உரிமைத்தொகைத் திட்டத்தில் மேலமுறையீடு செய்த 11.85 லட்சம் பேருக்கும் குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடங்கியுள்ளது.
மேல்முறையீடு செய்துத் தேர்வுச் செய்யப்பட்டுள்ள தகுதியான நபர்களுக்கு முதற்கட்டமாக ஒரு ரூபாய் அனுப்பி சோதனை நடைபெற்று வருகிறது.